துஆக்கள்

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ !
துஆக்கள்

اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77.


பொருள்: இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

(or)

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா.
ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396.

அல்லது

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா.
ஆதாரம்: புகாரி 5165, 3283.

துஆ 1-ன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

துஆ 2-ன் பொருள்:
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா  என்பதை அறிய

اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ

ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390. அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B]இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B]குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப[F]ள்லி(க்)கல் அளீம். ப[F]இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B] அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ[F] தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B](த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப[F]க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B]ரிக் லீ பீ[F]ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ[F] தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B](த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப[F]ஸ்ரிப்[F]ஹு அன்னீ வஸ்ரிப்[F]னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ. ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390.


பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன். இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.

Comments