சத்தியம் வந்தது அசத்தியம் ஒழிந்தது ! 3 4 இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது?

Wednesday, 18 February 2015

இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால்

வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் தினமும் ஸலாம் சொல்லிக்
கொண்டிருக்கும் தொழுகையாளிகள்!
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தொழுகையில்
(அமர்வில்) ‘அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்’ (அல்லாஹ்வுக்கு
சாந்தியுண்டாகட்டும். இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறி
வந்தோம்.


இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், ‘நிச்சயமாக அல்லாஹ்வே
‘ஸலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்)
அமர்ந்தால், ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவாத்து வத்தய்யிப்பாத்து.
அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள்
சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே
உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும்
உண்டாகட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும்
சாந்தி உண்டாகட்டும்)’ என்று கூறுங்கள்.

இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும்
ஸலாம் கூறினார்கள் என்றாகும். மேலும், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ
அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும்,
முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்
என்றும் நான் உறுதி கூறுகிறேன்)’ என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு
விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம்’ என்றார்கள்.

உடலுக்கும் ஆன்மாவுக்குமான ஒளியை இறைவனிடம் வேண்டிப் பெறுதல்!
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின்
துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில்
தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை
நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும்
கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை
நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர்
(ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக
அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு
தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக்
கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக
எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக
நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்
காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக்
கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம்
தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி
உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள்.
அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே,
அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள் அப்போது
நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்
கொண்டிருந்தார்கள்.

‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன்.
வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ
நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும்
ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என்
வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை
ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு
முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை
ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார். (உடல் எனும்)
பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்)
அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில்
ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என்
நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என்
சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம்
மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

 புகாரி பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6316நீர் அருந்தும் முறையும், நீர் அருந்தும் முன்னும் பின்னும் மொழிய
வேண்டிய இறை நினைவும்!
அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில்
ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’
என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம்
நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை
நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை
ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள்
எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்:
முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட
வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும்
பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு
வந்தனர்”அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத்,
திர்மிதீ.

“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர்
அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது
எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது
“பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’
என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு
அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ

எவரைத் திட்டி ஏசிப் பேசினீர்களோ, அவருக்காக ஓதும் துஆ!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
இவ்வாறு துஆ ஓதியதை நான் கேட்டேன்.

اَللّهُمَّ فَأيٌما مُؤمِنٍ سبَبتهُ فَاجعَل ذَالِكَ لَهُ قُربَةٌ إلَيكَ
يَوم القِيَامَةِ

”அல்லாஹும்ம பFஅய்யமா முஃமினின் ஸபப்தஹு பFஅஜ்அல் தாலிக லஹு குர்பதன்
இலைக்க யவ்மல் கியாமா”

பொருள்: ’யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசி விட்டேனோ
அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமை நாளில் உன் பக்கம் நெருங்கி
வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக.!’

ஆதார நூல்கள்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல்பாரி பாகம்-11 பக்கம்-171

முஸ்லிம் பாகம்-4 பக்கம்-2007.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்.

فَاجعَلحَا لَهُ زَكَاةً وٌَرَحمَةً
'பFஅஜ்அல்ஹா லஹு ஜகாதன் வ ரஹ்மா”

பொருள்: அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக ஆக்குவாயாக!


தனது உடலில் வலியை உணருபவர் என்ன செய்ய வேண்டும்? என்ன ஓத வேண்டும்?
தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று
மூன்று தடவை சொல்ல வேண்டும்। பிறகு ஏழு தடவை இவ்வாறு ஓத வேண்டும்:

اَعُودُ بِاللهُِ وقُدرَتِهِ شَرٌِ مَا اَجِدُ وَ اُحَاذِرُ


”அவூதுபில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர்”

பொருள்: அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலைக் கொண்டு பாதுகாவல்
தேடுகிறேன்; நான் உணருகிற அஞ்சுகின்ற தீமையை விட்டு!
நிர்வாகி
நிராகரிப்பாளர் தும்மும்போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?
يَحديكمُ اللهُ و يُصلحُ بَالكُم

”யஃதீகுமுல்லாஹு வ யுஷ்லிஹு பாலகும்”

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்। உங்களின் நிலைமையை
சீராக்கட்டும்.!

ஆதார நூல்கள்:

திர்மிதி பாகம்-5 பக்கம்-82

அஹ்மத் பாகம்-4 பக்கம் 400

அபூதாவூத் பாகம்-4 பக்கம்-308

ஸஹீஹுத் திர்மிதி பாகம்-2 பக்கம் 354

இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால் 

No comments:

Post a Comment