சத்தியம் வந்தது அசத்தியம் ஒழிந்தது ! 3 4 இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது?

Wednesday, 8 March 2017

சிந்திக்க சில நபிமொழிகள் !

சிந்திக்க சில நபிமொழிகள் !

ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ (புறம் பேசுவதை தடுப்பது போன்று) அவரை நரகிலிருந்து விடுதலை செய்யவது அல்லாஹுதஆலாவின் கடமையாகிவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

சிந்திக்க சில நபிமொழிகள் !

சிந்திக்க சில நபிமொழிகள் !

பொறாமையை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள், ஏனேனில், தீ விறகைத் தின்றுவிடுவதைப்போல், அல்லது வைக்கோலைத் தின்றுவிடுவது போல், பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்)

Tuesday, 28 April 2015

அல்லாஹ்வின் வல்லமை !!!

அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

Wednesday, 22 April 2015

கற்றுக் கொள்ளவேண்டிய துஆக்கள் !!!

கற்றுக் கொள்ளவேண்டிய துஆக்கள் !!!

மணமக்களை வாழ்த்த

بَارَكَ اللَّهُ لَكَ            பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க   ( ஆதாரம்:
புகாரி 5367, 5155, 6386 )
அல்லது
بَارَكَ اللَّهُ عَلَيْكَ       பா(B)ர(க்)கல்லாஹு அலை(க்)க ( ஆதாரம்:
புகாரி 6387 )
அல்லது
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா
பி(F)ல் கைர்  ( ஆதாரம்: திர்மிதீ 1011 )
அல்லது
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா
பீ(F) கைரின் ( ஆதாரம்: அபூதாவூத் 1819 )  என்று மணமக்களை வாழ்த்தலாம்.

Tuesday, 31 March 2015

துஆக்கள்

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ !
துஆக்கள்

اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77.

Wednesday, 18 February 2015

இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால்

வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் தினமும் ஸலாம் சொல்லிக்
கொண்டிருக்கும் தொழுகையாளிகள்!
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தொழுகையில்
(அமர்வில்) ‘அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்’ (அல்லாஹ்வுக்கு
சாந்தியுண்டாகட்டும். இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறி
வந்தோம்.

Wednesday, 4 February 2015

உம்ரா - ஹஜ்

உம்ரா - ஹஜ் 

ஹஜ்ஜின் சிறப்புகள்
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97


ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி பல ஹதீஸ்களை நாம் காண முடிகின்றது.