சத்தியம் வந்தது அசத்தியம் ஒழிந்தது ! 3 4 இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது?

Saturday, 13 December 2014

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள்

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள் 

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170


“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)
நூல் : அஹ்மத்

சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.
அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழி)
நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்:
(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி)
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)
நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ
ஹதீஸ்கள்:

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி அறிவிக்கிறார்கள் : என்னைப் பற்றிக் கூறப்பட்டு அப்பொழுது என் மீது ஸலவாத் கூராதவரின் மூக்கு  மண்ணைத் தழுவுமாக ! (நாசமாகட்டும்) (திர்மிதி )

நபி (ஸல்) அவர்கள்  கூறியதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : என் மண்ணறையை  பெருநாளாகக் கொண்டாடடப்படும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! (எனினும்)என் மீது ஸலவாத் கூறுங்கள்! நிச்சயமாக உங்களின் ஸலவாத் (உலகில்) நீங்கள் எங்கிருந்தாலும்,என்னை வந்து சேருகிறது.
(அபூதாவூது )

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : யார் என் மீது  ஸலாம் கூறினாலும் அல்லாஹ் என் உயிரை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறான்  . நான் அவரின் ஸலாமுக்கு பதிலளிப்பேன் . (அபூதாவூது )

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்: யாரிடம் என்னைப் பற்றி  கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் கூற வில்லையோ அவர் கஞ்சனாவர் .        (திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஓர் உணவை உண்டு ,அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய, மற்றும் ஓர் பானத்தைப் பருகி  அதற்காக அல்லாஹ்வைப் புகழக்  கூடிய அடியாரை நிச்சயமாக பொருந்திக் கொள்கிறான் .  (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்ஹம்து லில்லாஹ் கூறுவது கொண்டு தொடங்கப்படாத ஒவ்வொரு முக்கிய  விஷயங்களும்,பரக்கத்தை (அபிவிருத்தியை) விட்டு நீங்கியவையாகும்.
              (அபூதாவூது)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில்  ஆக்கிக் கொள்ளுங்கள் .அந்த வீடுகளை (தொழுகை இல்லாத ) மண்ணறைகளைப் போன்று ஆக்காதீர்கள் . (புகாரி, முஸ்லிம்)

 ஈமானின் சுவையை பெரும் மூவர் !
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : மூன்று விஷயங்கள் யாரிடம் இடம் பெறுகின்றனவோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்வார் .1,மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.2, அவர் எம்மனிதரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பார் .3, இறை நிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை நீக்கி ஈடேற்றம் அடையச் செய்த பின் மீண்டும் அந்த நிராகரிப்பின் பக்கம் திரும்புவதை , தம்மை நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பார் . ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) கூறினார்கள் : கியாமத் நாளில் மக்களுக்கு வியர்வை ஏற்படும் எந்த அளவென்றால் அவர்களின் வியர்வை பூமியில் எழுபது முழம் செல்லும் . அவ்வியர்வை அவர்களின் காதுகளைத் தொடுமளவு அவர்களை சூழ்ந்து கொள்ளும் . ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் பயத்தால் அழக்கூடிய மனிதர்  பால் மடுவிற்கு மீளும் வரை (ஒருபொழுதும்) நரகில் நுழைய மாட்டார் .அல்லாஹ்வின் பாதையில் மேனியில் படிந்த புழுதியும் நரக நெருப்பின் புகையும் ஒன்று சேராது. (திர்மிதி)
அல்லாஹுதஆலா இந்தக் குரானின் காரணமாக பலரின் பதவிகளை உயர்த்துகிறான் ,பலரின் பதவிகளை தாழ்த்துகிறான் , அதன் படி செயல்படுகிறவர்களுக்கு  உலகிலும் மறுமையிலும் அல்லாஹுதஆலா கண்ணியத்தைத் தருகிறான் ,அதன் படி செயல்படாதவர்களை அல்லாஹுதஆலா இழிவுபடுத்திவிடுகிறான் ,,என நபி (ஸல் ) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் உமர் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் .      ஆதாரம் :முஸ்லிம் .

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

வலியுறுத்திக்கேட்பது: அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.

பாவமானதைக் கேட்கக் கூடாது: அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

அவசரப்படக்கூடாது: பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.

நிராசை அடையக்கூடாது: சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)

’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!

உணவு உடை ஹலாலாக இருத்தல்: நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)

ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.

பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்: கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ

இரவின் கடைசி நேரத்தில்… இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 1ஃ1145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)

ஸஜ்தாவின்போது…. ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்.. பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.

தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது…. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா

ஜும்ஆ நாளில்….. வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.

நோன்பாளி நோன்பு திறக்கும் போது… நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியான அரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன். 1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹி பத்தாம் ஆண்டு….
பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.
1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.
5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.
6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.
உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.
முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்!உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள்.உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.
8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)
9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)
சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.
10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,’ அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!
இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு    ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)

ஒவ்வொரு உம்மத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு எனது உம்மத்தினரின் சோதனை செல்வமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் :கஃப் (ரலி)
ஆதாரம்:திர்மிதி.

ஒரு மனிதன் செய்த பாவத்தின் காரணமாக அவனுக்கு இரணம் தடை செய்யபடுகின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : சவ்பான்
ஆதாரம்: இப்னு மாஜா .

தர்மம் இறைவனின் கோபத்தைத் தணிப்பதுடன் கெட்ட மரணத்தை விட்டும் உங்களைப் பாதுகாக்கின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் :அனஸ் (ரலி)
ஆதாரம்: திர்மிதி.

இறைவன் உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை ; மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்கலையும்தான் பார்க்கிறான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்.

சிவப்பு ,கருப்பு இவைகளை வைத்து நீ சிறந்தவனாக முடியாது .அந்த நிலையை தக்வாவின் மூலமாக அடைந்திருந்தாலே தவிர என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)
ஆதாரம்:அஹ்மத் .

நீர் உம் சகோதரரை மலர்ந்த முகத்துடன் நோக்குவதும் ஒரு நற் செயலேயாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி)
ஆதாரம்:அஹ்மத் .

ஸலாம் கூறி (தன் பேச்சைத்) துவக்குபவரே அல்லாஹ்விடம் மனிதகளில் மேலானவர் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர் :அபூ உமாமா (ரலி)
ஆதாரம்:அஹ்மத்

வட்டி (வரவு) எவ்வளவுதான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போககூடியதே என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
ஆதாரம்:இப்னு மாஜா .

நிச்சயமாக உண்மை நலவாகும்.நலவு சுவனத்தின் பக்கம் வழி காட்டும் .மேலும் திண்ணமாக பொய் பாவமாகும் அது நரகத்தின் பக்கம் வழிக்காட்டும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் :இப்னு மஸ்ஊத் (ரலி)
ஆதாரம்:புகாரீ ,முஸ்லிம்.

அல்லாஹ்விற்காக பிரியம் வைப்பதும் அவனுக்காகவே கோவப்படுவதும் இறைவனுக்கு மிகப் பிரியமான செயல்களாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அபூதார் (ரலி)
ஆதாரம்:அஹ்மத்.

அமல்கள் முடிவை கொண்டு கணிக்கப்படுகின்றன என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
அறிவிப்பாளர்:சஹ்ல் (ரலி)
ஆதாரம்: புகாரீ ;முஸ்லிம் .

மண்ணறையாகிறது மனிதனுக்கு சுவனப் பூஞ்சோலைகளில் ஒன்றாகவோ நரகப்படுகுழியில் ஒன்றாகவோ அமைகின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூசயீத் (ரலி)
ஆதாரம்: திர்மிதி.


கியாம நாளையில் மற்ற நபிமார்களை பின்பற்றுபவர்களை விட என்னைப் பின்பற்றுபவர்களே அதிகமாக இருப்பார்கள்.
நூல்: முஸ்லிம்)

ஒரு கூட்டம் என்னுடைய (பரிந்துரை )ஷபாஅத்தின் பேரில் நரகத்தை விட்டும் வெளியேறுவார்கள் .பிறகு அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள் .
நூல்: புகாரி)

எனது உம்மத்தினர்களில் பெரும் பாவிகளுக்கும் என்னுடைய ஷபாஅத் (பரிந்துரை) உண்டு.
நூல் :அபூதாவூது)

என்னை உங்கள் உயிருக்கு மேலாக உங்கள் பெற்றோருக்கு மேலாக , உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திருக்கும் மேலாக என்னை நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்.
நூல்கள் : முஸ்லிம், அபூதாவூது)

ஒரு பெண்ணை அவளுடைய செல்வம் , அழகு , குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மனம் முடிக்கப்படுகிறது . நீங்கள் மார்க்கபற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நூல் :புகாரி)

மனைவியிடம் நல்லவரே உங்களில் நல்லவர் (முஹம்மதாகிய ) நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன் .
நூல்: திர்மிதி)

நான் ஒரு செயலை செய்யுமாறு கட்டளையிட்டால் உங்களால் முடிந்த அளவு அதனை செயல்படுத்துங்கள் . ஒரு செயலை செய்யக் கூடாது என்று நான் தடுத்ததை நீங்கள் செயல்படுத்தாதீர்கள் .
நூல்: முஸ்லிம்)

ஒரு பெண் தன் கணவனுக்கே தனை ஒப்படைத்த பிறகு அவளோடு இல்லறத்தில் இனிமை சுவைத்த பிறகு மனைவியின் ரகசியங்களை வெளியே கூறிக்கொண்டு அலைபவன் மகா கெட்டவன்.
நூல்:முஸ்லிம்)

புத்திசாலி யார்? என்றால் தனது மன நிலையை அறிந்து மறுமையில் நற்கூலி தரக்கூடிய செயலை  உலகில் செய்யக் கூடியவர் தான் ! புத்தியற்றவர் யார்? என்றால், மனம் விரும்பக்கூடிய [கெட்ட ] செயல்களைச் செய்து விட்டு 'அல்லாஹ் மன்னித்து விடுவான்  என்ற ஆசை வைத்திருப்பவரே! ஆதாரம் [திர்மிதி]

அல்லாஹ்  கூறுகிறான் .. ''ஓ மனிதனே! [உலகில் எல்லாக் கவலைகளையும்] ஒதுக்கி வைத்துவிட்டு  எனது வணக்கத்தில் ஈடுபாடு ,, நான் உனது நெஞ்சத்தை எதையும்  இலட்ச்சியப்படுத்தாத் தன்மையைக் கொண்டு நிரப்பிவிடுவேன் . மேலும்  உனது அல்லல்களையும் தூரமாக்கிவிடுவேன் . இப்படி நீ செய்யவில்லையானால்  உனது இரு கரங்களையும் உலகச் சிக்கல்களில் சிக்க வைத்துவிடுவேன்  ,, உனது பொருள் தேவைகளையும் [உன்னை விட்டு] விலக்கமாட்டேன்!
ஆதாரம்.. [திர்மிதி]

ஒருவர் , மற்றவரைப் பார்த்து , 'பாவி' 'காஃபிர் ' என்று குற்றஞ்சாட்டி அவர் அப்படி இல்லாதவராயிருப்பின்  அந்தப் பழிச் சொற்களுக்குச் சொன்னவரே உரியவராகி விடுகிறார்  .
ஆதாரம் [புஹாரி ]

ஆபாச வார்த்தைகள் பேசுபவன் ,, பழித்துப் பேசுபவன் ,, குறை கூறிப் பேசுபவன் ஆகியோர்  , முழுமையான விசுவாசிகள் அல்லர் .
ஆதாரம்[திர்மிதி]

யாரைப் பார்த்தும் , உன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் '' என்றோ ''உன் மீது அல்லாஹ்வின்  கோபம் இறங்கட்டும் '' என்றோ , ''உன்னை நரகத்தில் போடட்டும்'' என்றோ சொல்ல கூடாது.
ஆதாரம்[அபூதாவூத் , திர்மிதி]

யார் தனது வறுமையைப் பிறர் மீது [பிச்சை கேட்டு] இறக்கிவிடுகிராரோ , அவரை விட்டு வறுமை  நீங்காது! யார் தனது வறுமையை அல்லாஹ்வின் மீது [ஆதரவு கேட்டு  ] இறக்கிவிடுகிராரோ அல்லாஹ்  அவருக்கு வெகுவிரைவில் கண்ணியமான  முறையில் உணவைத் தருகிறான்.
ஆதாரம்[அபூதாவூத், திர்மிதி]

போதுமென்ற மனத்தைக் கொண்டு தான் மனிதன் மன நிம்மதி பெருகின்றானே  தவிர,  செல்வத்தைக் கொண்டும் பொருள்களைக் கொண்டும் அல்ல .
ஆதாரம்[புஹாரி , முஸ்லிம்]

ஓ ஆதமுடைய மகனே! [தேவைக்கு அதிகமாயுள்ள ] பொருள்களைச் [தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து]  செலவு செய்து விடுவது உனக்கு நல்லதாகும்  . செலவு செய்யாது பதுக்கி வைப்பது உனக்கு மிக கெட்டதாகும் . தினசரி தேவைக்கானதைச் செலவு செய்து விடுவது கெட்டதாகாது  , [செலவு செய்ய முற்படும் பொழுது ] உனது உற்றார், உறவினருக்குக் கொடுப்பதிலிருந்து ஆரம்பம் செய்  , ஞாபகமிருக்கட்டும்! [கொடுக்கும்] மேலுள்ள கரம், [வாங்கும் ] கீழுள்ள கரத்தை விட  சிறப்பானதாகும் .
ஆதாரம்[முஸ்லிம்]

ஒருவரின் உதவிக்கு நன்றி கூறிப் புகழ்வதாய்  இருந்தால் அவரிடம் , 'ஜஸாக்கல்லாஹ்  கைரா '[அல்லாஹ் இதற்கு நற்கூலி கொடுப்பானாக] என்று கூறிவிட்டால்  , அதனைவிடப் புகழ்வதற்கு அவருக்காக எதனையும் விட்டு வைக்கவில்லை .
ஆதாரம் ..திர்மிதி ]

ஒருவர் ஏதேனும் உதவி செய்தால், உதவி பெற்றவருக்குச் சக்தி இருந்தால் , அதே அளவு  அவரும் உதவி செய்து விட வேண்டும் . [அந்த அளவு அவருக்கு] சக்தியில்லை  என்றால் உதவி செய்தவருக்கு நன்றி கூறிவிடவேண்டும் . இந்த நன்றி  கூறுவதும் அதற்கு போதுமான தாகிவிடுகிறது . யார் அந்த உதவியை நன்றி  கூறாதிருக்கிராரோ , அவர் நன்றி கெட்டவராகிரார் . யார், மக்கள் செய்த உதவிக்கு  நன்றி கூறவில்லையோ , அவர் அல்லாஹ்வுக்கும் நன்றி கூறாதவராகிறார்  .
ஆதாரம் ..திர்மிதி ]

மனிதனுக்கு கிழடு தட்டி விட்டால் , இரண்டு விஷயங்கள் வாலிபமடைந்து விடுகின்றன,, ஒன்று பொருள்கள் மீதுள்ள பேராசை ,, இரண்டு.. வயதின் மீதுள்ளது  .
ஆதாரம் .. புஹாரி , முஸ்லிம் ]

மறுமை நாளில் , [நன்மை-தீமை] எடையிடும் தராசில், விசுவாசியுடைய நல்ல குணத்தால்  எடையை அதிகரிப்பதைப் போல வேறு எந்தப் பொருளாலும் [எடையை]  அதிகரிக்க முடியாது . அல்லாஹ் , புறம் பேசுவதையும், ஆபாச வார்த்தை  பேசுவதையும்  மிகவும் கெட்டதாகக் கருதுகிறான் .
ஆதாரம் .. அபூதாவூத் , திர்மிதி ]

'உறவு முறை ' [அல்லாஹ்வின் ஆசனமாகிய] அர்ஷிலிருந்து  தொங்கிக் கொண்டிருக்கிறது ,, ''யார் என்னை இணைக்கிரார்களோ, அல்லாஹ்  அவரை [தன்னோடு] இணைத்துக்கொள்ளட்டும் ,, யார் என்னைத் துண்டிக்கிராரோ, அவரை அல்லாஹ்  துண்டித்துவிடட்டும்'' என்று 'உறவு முறை ' கூறுகிறது .
ஆதாரம் .. புகாரீ , முஸ்லிம்]

யார் தனது இரணத்தில் [ரிஜ்க் ] விருத்தியும், வயதில் வளர்ச்சியும் வேண்டுமென்று விரும்புகிறாரோ , அவர் தனது உறவினர்களை அரவணைத்து நடந்து கொள்ளவும்.
ஆதாரம்..புகாரீ]

ஏழைக்குத் தர்மம் கொடுப்பது அது ஒரு தர்மம் தான் ,, உறவினருக்குத் தர்மம் கொடுப்பது இரண்டு  தர்மமாகும். ஒன்று, உண்மையான தர்மம்,, இரண்டு உறவினரை ஆதரித்த தர்மம்.
ஆதாரம்.. நசயீ ]

யாருக்காவது 'சஜ்தா' [சிரம்பணிவது ] செய்ய வேண்டுமென்று நான் உத்தரவிட நாடினால் , மனைவி கணவனுக்கு 'சஜ்தா ' செய்ய வேண்டுமென்று உத்திரவிட்டிருப்பேன்.
ஆதாரம் .. திர்மிதி]
குறிப்பு..
இதன் பொருள், மனைவி, கணவனுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பதே! நாகரிக காலத்தில்  கணவன் , மனைவியின் அடிமையாகவும், ஊழியம் புரிபவனாகவும் மாறி வருவது கண்கூடு.

ஒரு பெண், தனது கணவனுடைய பொருத்தத்தை அடைந்த நிலையில் இறந்து விட்டால், அவள் சொர்க்கத்திற்குள் நுழைந்து கொள்வாள் .
ஆதாரம்.. திர்மிதி]

ஒருவர் , அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! எந்தப் பெண் நல்லவள்? '' என்று கேட்டார். அதற்கு அண்ணலார் , ''எந்தப் பெண், அவளுடைய கணவன் அவளைப்பார்க்கும்பொழுது  , அவனைச் சந்தோஷப் படுத்தி விடுவாளோ அவனது சொற்படி கேட்டு, அதற்கு உட்பட்டு நடந்து கொள்வாளோ, அவன் வெறுப்படையக் கூடிய அளவில் அவனது உடமைக்கும், உயிருக்கும் [பாதிப்பு ஏற்படும்  வகையில்] விரோதம் காட்டாதிருக்கிறாலோ, [அவளே நல்ல பெண்] '' என்று கூறினார்கள் .
ஆதாரம் ..நசயீ ]

எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியமாக, ஒருவர் , தமது மனைவியைத் தம்மோடு படுக்கக் கூப்பிட்டு, அவள் வர மறுத்தால், அந்தக் கணவன்  அவளோடு பொருந்திக் கொள்ளாதவரை , அல்லாஹ் அவளோடு பொருந்திக் கொள்வதில்லை.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்]

விசுவாசம் கொண்ட ஒருவர் , தனது மனைவியோடு வெறுப்புடன் இருக்கக் கூடாது,, ஏனெனில் அவளுடைய செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்காதிருந்தாலும், ஏதேனும் அவளுடைய ஒரு  செயலாவது பிடித்தமானதாக இருக்கக் கூடும் .
ஆதாரம் .. முஸ்லிம்]

பசித்தவருக்கு உணவளியுங்கள்,, நோயுற்றவரைப் பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள். சிறைப்பட்டவரை விடுதலை பெறச் செய்யுங்கள்.

ஆதாரம்..புகாரீ , அபூதாவூத்]

மறுமை நாளில் அல்லாஹ்விடம் பெரிய மோசடியானச் செயல் எதுவென்றால் கணவன்-மனைவி  தனித்திருக்கும் நிலையில் நடப்பதை, இருவரில் ஒருவர் அச்செயலை வெளிப்படுத்தி விடுவது  தான் .
ஆதாரம்.. முஸ்லிம், அபூதாவூத்]

ஓ அபூதர்ரே! எத்தகைய நன்மையான செயலையும் குறைத்து மதிப்பிடாதீர்! உமது சகோதரனை முகமலர்ச்சியுடன் சந்திப்பதும் நன்மையே!  குழம்பு சமைத்தால், அதில் [சிறிது] தண்ணீர் அதிகமாக ஊற்றி , [தேவைப்படும்] அண்டை வீட்டுக்காரருக்கும் அதிலிருந்து ஓரிரண்டு கரண்டி [குழம்பு] கொடுத்துவிடவும்.
ஆதாரம் ..திர்மிதி]


அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவர், நரகில் தள்ளப்பட மாட்டார்! கறந்த பாலை மீண்டும் பால்  காம்புகளுக்குள் செலுத்த முடியாது என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவே நிச்சயமாக இந்த விஷயமும் இருக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் நடக்கும்போது கிளம்பும் தூசியும், நரக நெருப்பின் புகையும் [ஒன்றாகச்] சேர முடியாது.
ஆதாரம் .. திர்மிதி ,, நசயீ ]

பொறாமைப் படுவதை விட்டுப் பேணுதலாக இருந்து கொள்ளுங்கள்,, விறகு அல்லது  வைக்கோலை நெருப்பு தின்று விடுவதைப் போன்று பொறாமை நன்மைகளைத் தின்று விடுகிறது.
ஆதாரம் .. அபூதாவூத்]

மனிதனுக்குக் கிழடு தட்டி விட்டால் , இரண்டு விஷயங்கள் வாலிபமடைந்து விடுகின்றன,, இன்று பொருள்கள்  மீதுள்ள பேராசை ,, இரண்டு.. வயதின் மீதுள்ளது.
ஆதாரம் .. புகாரீ , முஸ்லிம் ]

ஒரு மனிதனுக்கு இரு பள்ளத்தாக்குகள் நிறைய செல்வம் குவிந்திருந்தாலும், மூன்றாவதையும் நிரப்பிக் கொள்ளும்  முயற்சியிலும், கவலையிலுமே மூழ்கியிருப்பான். மனிதனுடைய [பேராசை பிடித்த] வயிற்றை [புதை குழியின்] மண்ணைத் தவிர வேறெதைக் கொண்டும் நிரப்ப முடியாது! எவர் [பேராசைக் கொள்வதை விட்டு அல்லாஹ்விடம்] பாவ மன்னிப்புக் கேட்கிறாரோ, அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்கிறான்  .
ஆதாரம் .. புகாரீ, முஸ்லிம்]

ஹஜ்ரத் அபூதர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. '' நான் அண்ணல் நபி [ஸல்] அவர்களது சமுகத்தில் சென்றிருந்தேன் .. அவர்கள் கஅ பத்துல்லாஹ்வின் நிழலில் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் ,, ''க அ பத்துல்லாஹ்வை படைத்தவன்  மீது சத்தியமாக , அவர்கள் பெருத்த நஷ்ட்டத்திலுல்லார்கள் ! '' என்றுகூறினார்கள்  அப்பொழுது நான் , அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்கள் உங்கள் மீது அர்ப்பணம்! யார் அந்த மக்கள்?'' என்று கேட்டேன் . ''நிறையச் செல்வத்தைச் சம்பாதித்து வைத்துக் கொண்டு  தனக்கு முன்னும் பின்னும், வலப்பக்கமும், இடப்பக்கமும் [உள்ள ஏழை மக்களுக்குக் கொடுத்து] நற்காரியங்களுக்காக செலவு செய்யாதவர்கள்!'' என்று கூறினார்கள் .
ஆதாரம் .. புகாரீ , முஸ்லிம்/ திர்மிதி

இரண்டு குணங்கள் ஒரு விசுவாசியிடம் சேர்ந்திருக்காது, ஒன்று.. கஞ்சத்தனம் , மற்றொன்று.. கெட்ட குணம் . [இந்த இரண்டு குணங்களும் கொண்ட ஒருவர் , பரிபூரண விசுவாசியாக இருக்கமாட்டார். என்ற கருத்தும் கொள்ளலாம்]
ஆதாரம் .. முஸ்லிம் , திர்மிதி ]

மனிதன், ''இது என்னுடைய பொருள் ,, இது என்னுடைய பொருள்! '' என்று கூறுகிறான்  . ஓ ஆதமுடைய மகனே ! நீ உண்டு அழித்ததும் , உடுத்திக் கிழித்ததும், நற்காரியங்களுக்காக செலவு செய்ததும் தவிர வேறு ஒன்றும்  உனக்குச் சொந்தமல்ல!
ஆதாரம் .. முஸ்லிம் , திர்மிதி ]

''பொருள்களைச் சேர்ப்பதில் எத்தகைய பொருள்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும்? '' என்று அண்ணலாரின் தோழர்கள் கேட்டபொழுது  ''அல்லாஹ்வை திக்ரு செய்யும்  நாவு , நன்றி கூறும் உள்ளம் , நற்குணமுள்ள மனைவி , இவற்றால் ஒரு விசுவாசியின் விசுவாசம் உறுதியாக இருப்பதில் உதவியாக இருக்க வேண்டும்'' என பதிலளித்தார்கள்.
ஆதாரம்.. திர்மிதி]

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.  அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும். ஸலாமுக்கு பதில் கூறும்படியும். தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக“ என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

3 comments:

  1. masha allah arumaiyana pathiwuhal

    ReplyDelete
  2. Masha allah....Allah the masss.....

    ReplyDelete
  3. Mashallah but podum hadess ku number mention pannuga

    ReplyDelete