சத்தியம் வந்தது அசத்தியம் ஒழிந்தது ! 3 4 இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது?

Saturday, 13 December 2014

இதோ சுவர்க்கத்தை பாருங்கள்!

இதோ சுவர்க்கத்தை பாருங்கள்!

முஃமின்களுக்குச் சுவர்க்கத்தில் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள நற்பாக்கியங்கள்.
சுவர்க்கத்தின் உணவு எவ்வாறு ஜீரணமாகும் .
சுவர்க்கவாசிகள் சுவனத்தில் எப்படி இருப்பார்கள்.
சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதன்.
சுவர்க்கத்து முத்துக் கூடாரம்.
சுவனத்தில் மாபெரும் மரம்.
சுவர்க்கவாசிகளின் பதவிகள்.
சுவனத்தின் ஒரு சிறு பகுதி மதிப்பு .
சுவர்க்கத்தின் கடைவீதி .
ஒளி சிந்தும் சுவன அறைகள் .
என்றும் இளமை ,என்றும் மகிழ்ச்சி .
அல்லாஹு தஆலா வின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது.


அல்லாஹு தஆலா கூறுகிறான் :
நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள், நிச்சயமாக சுவனங்களிலும் (அங்குள்ள)நீரூற்றுகளிலும் இருப்பார்கள் .சாந்தியுடன் அச்சமற்றவர்களாக ,அவற்றில் நுழைங்கள் (என்று அவர்களுக்கு கூறப்படும்)

அவர்களின் நெஞ்சங்களில் இருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்.அவர்கள் சகோதர்களாக இருக்கும் நிலையில் ,ஒருவருக்கொருவர் முன்னோகியவர்கலாகக் கட்டில்களின் மீது அமர்ந்து இருப்பார்கள்.

அங்கு ,அவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது .மேலும் ,அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுபவர்களும் அல்லர் ;; (அல்குர்ஆன் 15:45-47)

என்னுடைய அடியார்களே! இன்று உங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது .நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள் .
அவர்கள் நம்முடைய திருவசனங்களை ஈமான் கொண்டு முஸ்லிம்களாக இருந்தார்களே -அத்தகையோர் தாம்.
நீங்களும்,உங்கள் மனைவியரும் ,மகிழ்ச்சிகுரிவர்களாக இருக்கும் நிலையில் ,சுவர்க்கத்தில் நுழையுங்கள் .(என அவர்களுக்கு கூறப்படும்)

தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும், அவர்களிடம் சுற்றிக்கொண்டு வரப்படும்.அவர்களுடைய உள்ளங்கள் எதனை விரும்புகிறதோ அதுவும் அவர்களுடைய கண்கள் எதனைக் கண்டு இன்பமடைகிறதோ அதுவும், (அவர்களுக்கு) அதில் உள்ளன .அதில் நீங்கள் என்றும் நிரந்தரமாக இருப்பீர்கள்.(என்றும் அவர்களுக்குக் கூறப்படும்)

அந்த சொர்க்கமாகிறது .நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணத்தினால் அதை நீங்கள் அனந்தரமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறீர்கள் .

அதில் உங்களுக்கு அதிகமான கனி (வகை) களும் உண்டு அவ்வற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள் . (அல்குர்ஆன் 43:68-73)

நிச்சயமாக இறையச்சம் உடையவர்கள் பயம்மற்ற இடத்தில் இருப்பார்கள் .

அவர்கள் சுவர்கங்களிலும் ,நீர் ஊற்றுகலிலும் ,(அருகிலும்) இருப்பார்கள்.அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக ,,ஸூன் துஸ் ,, என்னும் மென்மையான பட்டாடைகளும் ,இஸ்தப்ரக்க் ,, என்னும் கெட்டிப் பட்டாடைகளும் அணிந்திருப்பார்கள் .

இவ்வாறே ,(அவர்களை நாம் கண்ணியப்படுத்துவோம்) மேலும் ஹூருல்ஈன்  என்னும் சுவர்க்கத்து கன்னியர்களை அவர்களுக்குத் துணைவியாராக ஆக்கி வைப்போம் .

அவற்றில் ,அச்சமற்றவர்களாக இருக்கும் நிலையில் ,எல்லா (விதக்) கனிகளையும் கேட்டுப் பெறுவார்கள்.

முதல் மரணத்தை தவிர, வேறு எந்த மரணத்தையும் அதில் அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள் .அவர்களை நரக வேதனையை விட்டும் ,அவன் பாதுகாத்து கொண்டான் .

உம்முடைய இரட்சகனின் நின்றும் உண்டான அருட்கொடையாக (அவர்களுக்கு இத்தகைய நற்பாக்கியங்கள் அவன் வழங்கிகிறான் ) அதுவே மகத்தான வெற்றியாகும்.அல்குர்ஆன் 44:51-57)

நிச்சயமாக நல்லோர்கள் (பாக்கியம் மிக்க சுவர்க்கமான) ,,நயீமில் ,, இருப்பார்கள்.

கட்டில்களின் மீதிடுந்து (தஹ்ங்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள சுவனத்தின் இன்பமான காட்சிகளை )பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் முகங்களில் சுவனத்தின் செழு செழிப்பு நீர் அறிவீர்!.
முத்திரையிடப்பட்ட தூய மதுவிலிருந்து அவர்கள் புகட்டபடுவார்கள் .
அதனுடைய முத்திரை கஸ்தூரியாகும் .ஆகவே ,அவற்றின் மீது ஆர்வம் கொள்பவர்கள் (அவற்றை பெற்று தரும் நல அமல்கள் மீது) ஆர்வம் கொள்ளட்டும்.
அதனுடைய கலவை ,,தஸ்னீம் ;; (என்னும் சுவர்க்க ) நீரூற்றில் நின்றுமாகும் .

(தஸ்னீம் ,, என்னும் அது சுவர்க்கத்தில்) ஒரு நீரூற்று    .அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் அதை அருந்துவார்கள் .(அல்குர்ஆன் 83:22-28)

ஹதீஸ் :

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்: சுவர்க்கவாசிகள் ,சுவர்க்கத்தில் உண்ணுவார்கள் .பருகுவார்கள் .மலம் கழிக்க மாட்டார்கள் .சளி சிந்த மாட்டார்கள் .சிறுநீர் கழிக்கமாட்டார்கள் .
என்றாலும் ,அவர்களின் உணவு கஸ்தூரியின் நறுமணமுள்ள ஓர் ஏப்பத்துடன் ஜீரணமாகிவிடும் .அவர்கள் இலகுவாக மூச்சு விட நல்லருள் புரியப்பட்டது போல சுவனத்தில்  ,,  ஸுப் ஹானல்லாஹ் ;; என்று தஸ்பீஹ் ;; செய்தும் ,அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியும் அல்லாஹ்வைப் புகழ  நல்லருள் புரியப்படுவார்கள். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அபூஹ்ர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :அல்லாஹு தஆலா  கூறினான் .என்னுடைய ஸாலிஹான  நல்லடியார்களுக்கு ,எந்தக் கண்களும் பாத்திராத; எந்தக் காதுகளும் கேட்டிராத ,எந்தக் மனிதனின் உள்ளத்தில்லும் தோன்றியிராத அளவு சுவர்க்கத்தின் இன்பங்களையும், சுகங்களையும் , நான் தயார் செய்து வைத்துள்ளேன் நீங்கள் விரும்பினால் ,பின்வரும்  ,,திருக்குர்ஆன் ,, வசனத்தை ஓதுங்கள்
ஆகவே ,அவர்கள் செய்து கொண்டிருந்த்வற்றிருக்கு  கூலியாக ,அவர்களுக்காக மறைத்து வைக்கபட்டிருக்கும் .கண்களின் குளிர்ச்சியை எந்த ஆத்துமாவும் அறிந்து கொள்ளாது .
(அல்குர் ஆன் 32:17) (புகாரி:முஸ்லிம்)

நபி (ஸல்) நவின்றதாக ,ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :சுவனத்தில் முதன் முதலாக நுழையும் கூட்டத்தாரின் தோற்றம் பதினான்காம் பக்கத்து ,, பூரணச் சந்திரன் ,, போன்று பிரகாசித்து கொண்டிருக்கும் .
அதனை அடுத்து நுழையும் கூட்டத்தாரின் வானில் இலங்கி கொண்டிருக்கும் நச்சத்திரங்கலைப் போன்று பிரகாசிப்பார் .
சுவர்க்கவாசிகள் சிறுநீர் கழிக்க மாட்டார்கள் .மலம் கழிக்க மாட்டார்கள் .எச்சில் துப்ப மாட்டார்கள் .சளி சிந்தமாட்டார்கள் .அவர்களின் தலை முடியைச் சீப்புகள் தங்கச் சீப்புகளாக இருக்கும் .அவர்கள் வியர்வை கஸ்தூரியை போன்று நறுமணம் உடையதாக இருக்கும் .அவர்களின் அறைகளில் நறுமணக் குச்சிகள் புகை போடப்படும் .
அவர்களின் மனைவிமார்கள்  ,,ஹூருல்ஈன் ,, எனும் (பெரிய கண்கள்யுடைய அழகான) சுவர்க்க கன்னிப் பெண்களாவர் .சுவனவாசிகள் அனைவரும் ஒரு மனிதரின் தோற்றத்தில் அதாவது தந்தை ஆதம் (அலை ) அவர்களின் தோற்றத்தில் இருப்பர் .அவர்களைப் போன்று வானில் அறுபதடி உயரம் இருப்பர் . (புகாரி; முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ; அவர்களின் பாத்திரம் தங்கமாகும் .அவர்களின் வியர்வை கச்தூரியாகும் .அவர்களின் ஒவ்வொருவருக்கும் இரு மனைவியர் இருப்பார்கள் .அவர்களின் கெண்டைக் கால் எலும்புகளின மூளை அவர்களின் சதிகளுக்கு வெளியே (இருந்து) தென்படும் அளவுக்கு அழகாக இருப்பார்கள் .சுவர்க்கவாசிகளிடையே கருத்து வேறுபாடு ,விரோதம் ,ஆகியவை இருக்காது.அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒரே மனிதனின் உள்ளத்தை போன்றிருக்கும் .(தங்கல்கிடையே அன்புடனும், பாசமுடனும் ஒற்றுமையாக இருப்பர் )அவர்கள் காலையிலும் ,மாலையிலும் அல்லாஹ்வைத்  ,, தச்பீஹ் செய்து கொண்டிருப்பார்கள் , என நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள் :நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.நரகிலிருந்து எல்லோரையும் விடக் கடைசியாக  வெளியேறி -சுவர்க்கத்தில் எல்லோரையும் விட கடைசியாக நுழையும் மனிதனைப் பற்றி நான் அறிவேன். அவன் கை கால்களால் தவழ்ந்தவனாக நரகத்திலிருந்து வெளியே வருவான் .அப்பொழுது அல்லாஹ் அஜ்ஜவஜல்ல அவனிடம்  ,, நீ போய் சுவர்க்கத்தில் நுழைவாயாக! என்று கூறுவான் .அதன்படி அவன் சுவர்க்கத்திர்க்குச் செல்வான் .அங்கு அது முழுதும் நிரம்பி விட்டது   போன்று அவனுக்குத் தோன்றும் .உடனே அவன் வெளியில் திரும்பி வந்து , என் இரட்சகனே ! சுவர்க்கம் நிரம்பி விட்டது,, அதற்க்கு அல்லாஹு அஜ்ஜவஜல்ல (என் அடியானே) நீ சென்று சுவனத்தில் நுழைவாயாக! என அவனுக்குக் கூறுவான் .அதன்படி சுவர்க்கத்திருக்கு (மீண்டும்) செல்வான் .(முதன் முறை தோன்றியது போன்று ) இம்முறையும் ,சுவர்க்கம் நிரம்பி விட்டதைப் போன்று அவனுக்கு தோன்றும் .அதனைப் பார்த்து விட்டு அவன் திரும்பி வந்து ,என்  இரட்சகனே ! சுவனம் நிரம்பி விட்டது ,, என்று கூறுவான் .அதற்க்கு , அல்லாஹு அஜ்ஜவஜல்ல  (அடியானே) நீ சென்று சுவனில் புகுவாயாக! நிச்சயமாக உமக்கு உலகை போன்றும் ,அதற்க்கு மேலும் ,அது போன்று பத்து மடங்கு அளவும் சுவர்க்கத்தில் இடல் கொடுக்கப்பட்டுள்ளது .அல்லது உலகைப் போன்று பத்து மடங்கு அளவு உமக்குச் சுவர்க்கத்தில் இடமளிக்கபட்டுள்ளத்து  ,, என்று கூறுவான் .

அதற்கவன்  , ,,யா அல்லாஹ் ! நீ என் எஜமானனாக இருக்கும் நிலையில் ; நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைப் பார்த்து சிரிக்கிறாயா ? எனக் கேட்ப்பான் .

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) கூறுகிறார்கள் :இதனைக் கூறும் பொழுது ,அண்ணல் நபி (ஸல்) தங்கள் கடைவாய்ப் பற்கள் வெளிப்படும்படி சிரித்ததை நான் பார்த்தேன் .பின்னர் கூறினார்கள் .இம்மனிதன் தான் சுவனவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள ,கடைசி மனிதனாவான் ,, எனப் பகர்ந்தார்கள்.
(புகாரி; முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூ மூஸா (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .நிச்சயமாக ! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் , நடுவில் துளையிடப்பட்ட ஒரே முத்தினால் ஆகிய கூடாரம் தயார் செய்யபட்டிருக்கும் .வானில் அதன் உயரம் அறுபது மைல்களாகும் .அக்கூடாரத்திலவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள் .அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான் .கூடாரம் விஸ்தீரணமாக -(பெரிய அளவில்) இருப்பதால் அவர்கள் சிலர், சிலரைப் பார்க்க மாட்டார்கள் . (புகாரி; முஸ்லிம்)
1 மைல் என்பது 6000முழம்  ஆகும் . (ரியாள் )

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அபூ ஸயீதில் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள் :

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது .அதன் அருகில் (அதன் நிழலில் ) நல்ல வலிமையான ,விரைவாக செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து சென்றாலும் ,அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது .(அத்தகு மாபெரும் மரமாகும் அது)

இமாம் புகாரி (ரஹ் ) இமாம் முஸ்லிம் (ரஹ் ) ஆகியோர் நபித் தோழர் ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா  (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கும் மற்றொரு ஹதீசி , ;; அம்மரத்தின் நிழலில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து செல்லுவான் .எனினும் ,அம்மரத்தை கடக்க மாட்டான் .,,என நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:சுவனத்தில் ஒரு வில்லின் அளவு இடம்,சூரியன் எவற்றின் மீது உதயமாகிறதோ அதனை விட (உலகம் மற்றும் அதன் மீதுள்ள அனைத்துப் படைப்புகளையும் விட ) மேலானதாகும் . (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு கடைவீதி உள்ளது.ஒவ்வொரு  ,, ஜும்ஆ ,, அன்றும் சுவர்க்கவாசிகள் அந்தகடைவீதிக்கு வருவார்கள் .அப்பொழுது வடக்குத் திசையிலிருந்து ஒரு காற்று வீசும் அக்காற்று அவர்களின் முகங்களிலும் ,ஆடைகளிலும் தவழ்ந்து நறுமணத்தை பரப்பும் .அதனால் அவர்களின் அழகும் ,பொலிவும் அதிகமாகும் .அதே நிலையில் அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்புவார்கள் .
அப்பொழுது அவர்கள் குடும்பத்தார்கள் , அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நிச்சயமாக உங்களின் அழகும் பொலிவும் அதிகமாகிவிட்டது என்பார்கள்.அதற்க்கு அவர்கள் ,, அல்லாஹ்வின் ,, மீது ஆணையாக எங்களுக்கு பின் உங்களின் அழகும், பொலிவும் கூட அதிகமாகிவிட்டது ;; என்பார்கள்.  (முஸ்லிம்)

ஹஜ்ரத் சஹ்ல் பின் ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள் :நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,நிச்சயமாக சுவனவாசிகள் ,சுவனத்தின் அறைகளை ,வானில் நீங்கள் நட்ச்சத்திரங்களை பார்ப்பதை போன்று (ஒளி சிந்துபவைகளாக)பார்ப்பார்கள் (அவ்வறைகளில் தங்கிருக்கும்  சுவன வாசிகள் ஒளிவீசுபவர்களாக இருப்பர் )     (புகாரி; முஸ்லிம்)

ஹஜ்ரத் அபூ ஸ யீது (ரலி) மற்றும் ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) ஆகிய நபித்தோழர்கள் இருவரும் அறிவிக்கிறார்கள்:சுவனவாசிகள் ,சுவனத்தில் நுழைந்ததும் ,ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து ,சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள் .ஒரு பொழுதும் மரணிக்க மாடீர்கள் .மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு பொழுதும் நோயாளியாக ஆக மாடீர்கள் .மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவெ இருப்பீர்கள் .ஒரு பொழுதும் வயோதிகம் (முதுமை) அடையமாடீர்கள் .மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்து கொண்டு இருப்பீர்கள் .ஒரு பொழுதும் கஷ்ட்டப்பட மாடீர்கள்;; என்று கூறுவார்.          (முஸ்லிம்)

ஹஜ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபி (ஸல்)  அவர்களுடன் அமர்ந்திருந்தோம் :அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை (பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள் .அப்பொழுது கூறினார்கள் : நீங்கள் இந்த நிலவை பார்ப்பத்தைப்  போல (கியாமத் நாளில்) உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள்.அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது . (புகாரி ;முஸ்லிம்)

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே தகும்!

நம் அனைவரையும் சுவனத்தில் பிரவேசிக்க அல்லாஹ் உதவியும் கிருபையும் செய்வானாக ஆமீன்..............  

1 comment: