அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திக்காமல் பெருமையடிப்பவர்களுக்கான தண்டனை
யார் அல்லாஹ்விடம் அவரது தேவையை கேட்பதை விட்டும் பெருமை அடிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கொண்டும் இழிவைக் கொண்டும் எச்சரித்துள்ளான், அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
40:60. "என்னையே நீங்கள் பிரார்த்தியுங் (பிரார்த்தனைகளுக்கு) கள்; நான் உங்(கள் பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவ தை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார் களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
யாருடைய உள்ளம் அல்லாஹ்விடம் மாத்திரம் தனது தேவைகளை கேட்கும் விடயத்தை வெறுக்கின்றதோ, அவ்வுள்ளம் படைப்புகளிடத்தில் தேவைகளை கேட்பதன் மூலமாக அமைதி பெற மாட்டாது. அத்துடன் அது வழிகேட்டிற்கும், மறுமை நாள் பற்றிய பொடுபோக்கு தன்மைக்குமான ஒரு அடையாளமுமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِذَا ذُكِرَ اللهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَة
39:45. மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் விடுகின்றன. இருதயங்கள் சுருங்கி
அதாவது:
அவர்களின் வணக்கத்திலும் உள்ளங்கள் பிரார்த்தனை பெருமைப்பட்டு, யிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள மறுத்தன.
பிரார்த்தனையே வணக்கம்
அல்லாஹ் உள்ளத்தோடு தொடர்பு படுத்தி அறிமுகப்படுத்திய ஈமானிய நிலைகள் அனைத்திலும் துஆ மிக அடிப்படையான ஒன்றாக உள்ளது.
வெளிப்படையான மற்றும் மறைமுகமான வணக்கங்கள் அனைத்தினதும் முடிவும் எதார்த்தமும் துஆவேயாகும். யாரொருவர் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும், ஹஜ் செய்தாலும், தர்மம் செய்தாலும் அவர் அந்நிலையில் இறைவனையே அழைக்கின்றார். அவர் அவரது இறைவனுக்காக நிறைவேற்றக்கூடிய வணக்கமும், அவரது அடிபணிதலும், அவரது அவன் மீதான அன்பும் - அவரது இறைவனிடத்தில் அவர் செய்த வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும்படியும், அவரின் பால் நெருங்கும் படியும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. துஆவே வணக்கமாகும், அதுவே வணக்கத்தின் அடிப்படையாகவும், யதார்த்தமுமாகவும் இருக்கின்றது. "துஆவே வணக்கமாகும்" (ஸல்லல்லாஹு அலைஹி என ரசூலுல்லாஹ் வஸல்லம்) அவர்கள் கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதினார்கள், அல்லாஹ் கூறுகின்றான்:
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ )
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்"
அல்லாஹ் கூறுகின்றான்:
فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ )
40:14. ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
துஆவினுடைய விடயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதிலேயே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் தூது அமைந்திருக்கின்றது என்பதை தனது சமூகத்திற்கு அறிவிக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்: அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ إِنَّمَا أَدْعُوا رَبِّي وَلَا أُشْرِكْ بِهِ أَحَدًا
72:20. (!) நபியே ! நீர் கூறும்: பிரார்த்திப்பதெல்லாம் "நான் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்."
Comments
Post a Comment